திருச்சி மா காவேரி மருத்துவமனைக்கு தேசிய அளவிலான விருது

0 183
Stalin trichy visit

திருச்சி, டிச.24 திருச்சி சிறந்த மற்றும் நேர்மையான மருத்துவ சேவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முழு அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, ‘2025-ஆம் ஆண்டின் சிறந்த தாய்-சேய் நல பிராண்டு’ என்ற தேசிய அளவிலான விருதை எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் திருச்சி மா காவேரி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதை திருச்சி காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி டைரக்டர் ஆர். அன்புச்செழியன் பெற்றுக்கொண்டார்.

இது குறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர், செயல் இயக்குனர், மற்றும் குழந்தை மருத்துவத் துறை தலைவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் டி. செங்குட்டுவன் எம்பிபிஎஸ் டிசிஹெட்ச் கூறுகையில்: இந்த தேசிய அளவிலான அங்கீகாரம், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக நாங்கள் பின்பற்றும் ஒளிவுமறைவற்ற, அன்பான மருத்துவ சேவைகள், அவர்களின் நலனில் நாங்கள் காட்டும் அக்கறை ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது. எங்களது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் இதர பணியாளர்களின் அயராத கூட்டு உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது. மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், பாதுகாப்பான சிகிச்சையை வழங்குவதில் எங்களுக்கிருக்கும் உறுதியையும் இந்த விருது அங்கீகரித்துள்ளது, என்றார்.

இந்த விருதிற்காக நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேலான மகப்பேறு மற்றும் பிரசவ சேவை மருத்துவமனைகள், குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனங்கள், மற்றும் குழந்தை வளர்ப்பு சேவை, மனநலம் மற்றும் குடும்ப நல நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டன. சேவையில் பாதுகாப்பு, நூதனம், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மற்றும் சேவைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மா காவேரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.

இவற்றைத் தாண்டி சந்தையில் இம்மருத்துவமனைக்கு உள்ள நல் மதிப்பு, அதற்கு கிடைத்துள்ள பாதுகாப்பு சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனை செயல்படுத்தி வரும் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் ஆகியவற்றுக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.