ஒரே மொழி, உணவு, ஆடை என்பது எப்பொழுதும் நடக்கவே நடக்காது : திருச்சில் கமல்ஹாசன் பேச்சு
திருச்சி, டிச.24 மொழி, உணவு, ஆடை உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஒன்றே ஒன்று தான் இருக்க வேண்டும் என்பது எப்பொழுதும் நடக்கவே நடக்காது – திருச்சியில் கமல்ஹாசன் பேச்சு
இந்திய உடற்கல்வி அறக்கட்டளை சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கமலை நடிகனாக மட்டும் சுருக்கி விட முடியாது சமுதாயம் சார்ந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக பலரை படிக்க வைத்து வருகிறார். கமல் உழைப்பை நாம் பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் விளையாட்டு போட்டிகளுக்கு செல்பவர்களுக்கு, வெற்றி பெற்றவர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு வகைகளில் உதவியும் ஊக்கமும் செய்து வருகிறது என்றார்.
அதன் பின் பேசிய கமல்ஹாசன்…விளையாட்டு என்பது தேச ஆரோக்கியத்தின், வலிமையின், மன உறுதியின் அடையாளம் விளையாட்டு தியாகத்தின் அடையாளமும் கூட. விளையாட்டு வீரரின் தியாகம் புரிந்தால் ஜனநாயகும் புரிந்து விடும். விளையாட்டு மட்டுமல்ல ஒரே மொழி, ஒரே ஆடை, ஒரே உணவு என எதிலும் ஒன்றே ஒன்று என மட்டும் இருக்க முடியாது. இதெல்லாம் நடக்காது, ஒரே பொட்டு ஒரே நாமம் என்பதெல்லாம் நடக்கவே நடக்காது. வாழ்க்கையில் ஒரு பகுதி கல்வி அதே போல ஆரோக்கியமும் தான் அதற்கு முக்கியம் விளையாட்டு தான்.
எனக்கு பெரும் ஆசான்கள் இருந்துள்ளார்கள். படிக்காமல் மேதையாவது இருக்கட்டும் படிக்காமல் மேடையே ஏற்ப முடியாது. எனக்கு பெரும் ஆசான்கள் இருந்துள்ளார்கள் யூ.கே.ஜியில் எனக்கு தமிழ் கற்று தந்தவர்கள் கலைஞர் பாரதிதாசன் சிவாஜி கணேசன் தான்
உலகை மாற்றும் வல்லமை விளையாட்டிற்கு உண்டு சினிமா திரையரங்குகளில் தான் முதலில் ஜாதி ஒழிந்தது என நான் நம்புகிறேன் அது வீதிக்கும் வர வேண்டும் என் காலத்திலேயே அது நடக்க வேண்டும் என்பதும் என் விருப்பம்.
மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், பொறுமையாக இருங்கள் என கூறி வந்தேன். தற்போது அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொறுமையாக இருங்கள் என கூறியதால் தற்போது பொறுமையாக இருக்க கூடாது இது களமாட வேண்டிய நேரம். பெரும்பான்மை என்பது ஜனநாயகம் அல்ல எல்லோரையும் பாதுகாப்பது தான் ஜனநாயகம். தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நிச்சயம் நடக்கும் நடந்தே ஆக வேண்டும்
கல்வி, விளையாட்டு, அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும்
சாதனை என்பது சொல் அல்ல செயல் தமிழ்நாட்டிலிருந்து மிக விரைவில் ஒலிம்பிக் வீரர்கள் வர தான் போகிறார்கள். அரசியல் மட்டுமே விளையாட்டு அல்ல எல்லா திசைகளையும் பார்க்க வேண்டும். படிப்பத்தோடு மட்டுமல்ல தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்
உலக மேடைகளில் எல்லா துறைகளிலும் வெல்வது தான் வல்லரசின் அடையாளம் அதை நோக்கி நாம் நகர வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்….
எல்லா இடங்களிலும் அரசியல் பேசக்கூடாது. இயல்பு வாழ்க்கையில் விளையாட்டும் இருக்க வேண்டும் கல்வியும் இருக்க வேண்டும் அரசியலும் இருக்க வேண்டும் என்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முருகானந்தம் மக்கள் நீதி மையத்தில் இருந்து வெளியேறிய நிலையில், முருகானந்தத்துடன் இணைந்து இன்று விழாவில் பங்கேற்று உள்ளார். சமீபத்தில் நடந்த விழாவில் அவர் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையத்தில் போட்டியிடுவாரா அல்லது திமுகவில் போட்டியிடுவாரா என கேட்டபோது.போட்டியிடுவது குறித்து முருகானந்தம் அறிவிப்பார் என கமல் தெரிவித்து சென்றார்.
மக்கள் நீதி மையத்துடன் இணைந்து செயல்படுவாரா? என கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.