இயற்கை வேளாண்மை குறித்து விவசாயியுடன் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்

0 153
Stalin trichy visit

திருச்சி, டிச.26  இயற்கை வேளாண்மை குறித்து முன்னோடி விவசாயியுடன் கலந்துரையாடிய வேளாண் கல்லூரி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சின்னதுரை கடந்த நான்கு வருடங்களாக இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பஞ்சகாவியம், தச காவியம் ,ஐந்து இலை கரைசல், மீன் அமினோ அமிலம் மற்றும் ஜீவாமிர்தம் போன்ற கரைசல்களையும் தயாரித்து பயன்படுத்தி வருகிறார். இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா, ஆந்திரா பொன்னி மற்றும் ஏ எஸ் டி 16 போன்ற அரிசி ரகங்களை இயற்கை வேளாண்மை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

இதனுடன் சேர்த்து இயற்கை முறையில் ஆடு, மாடு மற்றும் கோழி ஆகியவற்றையும் வளர்த்து வருகிறார் இவற்றின் கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயு மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.

இயற்கை வேளாண்மை செய்துவரும் விவசாயி சின்னதுரையை நாளந்தா வேளாண் கல்லூரியின் முதல்வர், முனைவர் ஜெ.வெங்கட பிரபு,  இணை பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பா.குணா , முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ப. நந்தகுமார , உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ம.சுரேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் சந்தித்து இயற்கை வழி வேளாண்மை குறித்தும், உள்நாட்டு தொழில்நுட்ப கரைசல்கள், மண்புழு உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரித்தல் பற்றியும் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.