பெண் காவலர் புகார் : சவுக்கு சங்கரை காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு
திருச்சி, டிச.27சவுக்கு சங்கரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ரிஜெக்ட் செய்த நீதிபதி.
பிரபல யூடியூபர்ரான சவுக்கு சங்கர் போலீசை யூடியூப் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திருச்சி பெண் போலீஸ் ராஜராஜேஸ்வரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை ஆஜர்ப்படுத்த அழைத்து வந்த போலீசார் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் அப்போது புகார் அளித்தார். இதற்கிடையே ஜாமீனில் வந்த பின்னரும் தன்னை மீண்டும் யூடியூபில் இழிவாக பேசியதாக ராஜராஜேஸ்வரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .
அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் வேறு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் அனுப்ப திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர் படுத்தினர்.
நீதிபதி அனு ஸ்ருதி முன்பு ஆஜரானார். அப்போது சவுக்கு சங்கர் சார்பாக வழக்கறிஞர் முல்லை சுரேஷ் ஆஜரானார். இப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கரை கைது செய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் எனவும் அதற்கான காரணங்களையும் எடுத்துக் கூறினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரிமாண்டை ரிஜெக்ட் செய்தார்.