புதை சாக்கடை அடைப்பை நீக்க ரூ.3.78 கோடியில் புதிய வாகனம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 101
Stalin trichy visit

திருச்சி, டிச.27 திருச்சி மாநகர பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்க ரூ.378 கோடியில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வகையில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற சூப்பர் சக்கர் ரீசைக்கிளினர் வாகனத்தை பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிருவாக இயக்குநர் மதுசூதன், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.