திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணித்த துணை மேயர், தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள்

0 130
Stalin trichy visit

திருச்சி, டிச.27  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணித்த தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வகையில் ரூபாய். 3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற சூப்பர் சக்கர ரீசைக்கிளினர் வாகனத்தை (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிருவாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், திருச்சி மாநராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திருச்சி நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

((இந்த நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை மேயர் என யாரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளனர் ))

Leave A Reply

Your email address will not be published.