சுமை தூக்கும் தொழிலாளி உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

0 148
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரில் சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் துறையூர் கீரம்பூர் சாலையில் உள்ள அங்காயி கோவில் அருகே கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர்

விசாரணையில் அவர் துறையூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான பெரியசாமி (வயது 45 ) என தெரியவந்தது.

இதை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உடலில் ஆடைகள் இல்லாமல் ஜட்டியுடன் சடலமாக பெரியசாமியின் உடல் கிணற்றில் மிதந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் ஆறு பேர் பேர் இந்த கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டதால் இந்த கிணறை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.