பள்ளிக் குழந்தைகளின் காலை உணவு திட்டத்தின் மளிகை பொருட்களை திருடிய மர்ம நபர்கள்

0 149
Stalin trichy visit

திருச்சி, ஜன.19  திருச்சி அருகே குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தின் மளிகை பொருட்களின் அறையின் பூட்டை உடைத்து கிலோ கணக்கில் திருடிய மர்ம கும்பல் – போலீசார் வலைவீசு.

திருச்சி மாவட்டம் அப்பாதுரை ஊராட்சியில் மேலவாடி பகுதியில் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பொங்கல் விடுமுறைக்காக தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது நேற்று இரவு பள்ளியின் சமையலறையில் காலை உணவு திட்டத்திற்காக வைத்திருந்த பொருட்களை பூட்டை உடைத்து அரிசி சர்க்கரை வியாபா எண்ணெய் போன்ற பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கார், பைக் பொருட்களை கற்களால் அடித்து கண்ணாடிகளை உடைத்த தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தின் கீழ் உள்ள மளிகை பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.