கண் பரிசோதனை முகாம் : நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
திருச்சி, ஜன.23 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், உமர் நகரில் இன்று நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் பங்கேற்று மக்களுக்கு உதவி செய்தனர்.
இந்த மருத்துவ முகாமில் திருமதி சௌந்தர்யா கண் மருத்துவர் மற்றும் திருமதி மோனிஷா கண் மருத்துவர் ஆகியோர் கண் பரிசோதனையை செய்தனர். இந்த முகாமில் ஆண்கள் 40 பேரும் பெண்கள் 46 என மொத்தம் 86 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.கண்ணில் புரை மற்றும் கண்மங்கலாக தெரியும் நபர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.இந்த மருத்துவ முகாமில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ. சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு மகாத்மா கண் பரிசோதனை மருத்துவ முகாமில் பணியாற்றினர்.
இதனை நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால்,முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர்.பா. குணா இணைப் பேராசிரியர், துறைத்தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் பா. நந்தகுமார் முதுநிலை உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம. சுரேஷ் உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கலந்து கொண்டனர்.