கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம்
திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 15 நாள் தொடர் போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று துவங்கிய இந்த போராட்டம் ஆனது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாய விலைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தர வேண்டும் விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி காவிரியை இணைக்க வேண்டும். கூட்டுறவு சொசைட்டி மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று நடைபெற்று வரும் போராட்டம் குறித்து பேட்டி அளித்தார்.