ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புஞ்சை சங்கேந்தியில் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் புஞ்சை சங்கேந்தியில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். திருப்பதிக்கு சென்று சேவிக்க முடியாது என்பதால் முன்னோர்கள் புஞ்சை சங்கேந்தி கிராமத்திலேயே வெங்கடேச பெருமாளை எழுந்தருளச் செய்து இன்றுவரை பூஜை முறைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெருமாள் கோவில் ஆலயத்தை புதுப்பித்து விழா தொடங்கியது.
இதில் முதல் கால யாகசால பூஜை, இரண்டாம் கால யாகசால பூஜை,மூன்றாம் கால யாகசால பூஜை, பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.