லால்குடி அரசு கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா

0 132
Stalin trichy visit

திருச்சி, ஜன.24  திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையில் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். துறைத்தலைவர் சுலைமான் முன்னிலை வகித்தார்.

காவேரி கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையின் இனணப் பேராசிரியர் நீலா
ஆளுமை மேம்பாட்டின் பங்கு என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
உதவிப்பேராசிரியர்கள் ஜெயப்பிரகாஷ் மற்றும் வேம்பு வாழ்த்துரை வழங்கினா். இளம் செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளரும்,உதவிப் பேராசிரியருமான தீபாதேவி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.

இவ் விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற நிர்வாகிகள் மஹாஶ்ரீ, மாதவன்,ரஞ்ஜனி,கோகுல், அபினஶ்ரீ,தீக்‌ஷா, யுவராஜ், தர்ஷினி, ஆகியோர் பொறுப்பாளர்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.