மத்திய தொழிற்சங்கத்தினர் மாநில அளவிலான ஆயத்த மாநாடு

0 122
Stalin trichy visit

திருச்சி, ஜன.24  மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான மாநில அளவிலான ஆயத்த மாநாடு திருச்சியில் நடைபெற்றது

மத்திய அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ள நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ட ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு அனுமதித்திடும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு தொழிலாளர் மற்றும் விவசாய விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கம் – ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

அந்த வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இன்று வேலை நிறுத்த போராட்டத்திற்காக மாநில அளவிலான ஆயத்த மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் மாநாட்டில் வேலை நிறுத்த போராட்டத்திற்கான முக்கியத்துவம் குறித்து மாநில நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.

இந்த மாநாட்டில் விவசாயிகளை பாதிக்கும் விதை சட்ட முன் வடிவை கைவிட வேண்டும் விவசாய விலைப் பொருட்களுக்கு உரிய ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த முன் வடிவை திரும்பப் பெற வேண்டும், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அந்தத் திட்டத்தை முன்பிருந்த நிலையிலேயே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.