கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்ற இருவர் கைது
திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பார்களிலும் கள்ளச் சந்தையிலும் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை போலீசார் அதிரடி சோதனை இருவர் கைது மது பாட்டில்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பர்மா காலனி பூலாங்குடி துவாக்குடி அரியமங்கலம் எஸ்.ஐ .டி ஆகிய பகுதிகளில் அரசு மதுபான கடை மற்றும் எலைட் பார் இயங்கி வருகிறது. இங்குள்ள பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது அவ்வப்போது போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் விற்பனை செய்பவர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வழக்கமாக அரசு மதுபான கடையில் 12 மணிக்கு மேல் மது பாட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்னதாகவே கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது. இதுகுறித்து கிடைத்த தகவல் அடிப்படையில் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை முதலே அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற போலீசாரை கண்டதும் மதுவிற்பனை செய்த நபர்கள், மது வாங்க வந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து அங்கிருந்த மது பாட்டில்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்-பே ஸ்கேன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அருகில் உள்ள மற்றொரு பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்ற போது போலீசார் அங்கு சென்ற சோதனை நடத்தி விற்பனைக்கு வைத்திருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ள சந்தையில் மதுபானம் விற்ற அரியமங்கலம் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த பரத்குமார் (23), மற்றும் திருச்சி வரகனேரியை சேர்ந்த சத்திய நாராயணன் (39) ஆகிய இருவரையும் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.