விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 181
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கல்லூரி மாணவர்கள் மற்றும் குழு மேற்பார்வையாளரால் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், மேட்டுப்பட்டி கிராமத்தில் தந்தை ரோவர் மற்றும் ஊரக வேளாண்மை வளர்ச்சி நிறுவனத்தின் கல்லூரி மாணவர்கள் மற்றும் குழு மேற்பார்வையாளர் திரு.மு. அப்துல் ரகுமான் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை ஆகியோரால் மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் அதன் நோய்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

குறிப்பாக மேட்டுப்பட்டியில் சிவப்பு அழுகல் நோய் அதிகமாக கண்டறியப்பட்டதால் சிவப்பு அழுகல் நோயின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர். அது மட்டுமல்லாமல் விவசாயிகளின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.

இதனை கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் அஹமது இஸ்மாயில்.அ,அன்புச்செல்வன்.நீ,அர்ச்சுதன் .பி,அருண்குமார்.அ,பாலாஜி. செ,தனுஷ்ராஜ்.ச,தரணி.தா,தருண்.தி,பிரான்சிஸ் சேவியர்.எ,கோகுல்.ஏ மற்றும் செல்வி.ரா.பிரியங்கா உதவி பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், வேளாண் விரிவாக்கத்துறை, சு. சுகுனா உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், பயிர் நோயியல் துறை, மு.அப்துல் ரகுமான் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.