முசிறி அருகே நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

0 266
Stalin trichy visit

திருச்சி, ஜன.28 முசிறி அருகே அய்யாற்றில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் – துணை ஆட்சியர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே திண்ணகோணம் கிராமத்தில் உள்ள அய்யாற்றில் விவசாயிகள் மத்தியில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை ஆட்சியர் பாரூக் தலைமை வகித்து பேசினார். முசிறி தாசில்தார் லோகநாதன், அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புணரமைப்பு சங்க தலைவர் யோகநாதன், வேளாண் விஞ்ஞானி ராஜபாகு, பொறியாளர் அருள்வேல் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர்.

அப்போது கூட்டத்தில் காவிரி அய்யாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வரை வலியுறுத்தவும், அய்யாறு வாய்க்கால்களை தூர்வாரி இரு கரைகளையும் உயர்த்த வேண்டும், அய்யாறு வாய்க்காலுக்கு பிரதானமான தண்ணீர் கொல்லிமலையில் இருந்து வருவதால் கொல்லிமலையின் காவல் தெய்வமான கொள்ளிப் பாவை தெய்வத்தை ஐம்பொன்னால் வடிவமைத்து அய்யாறு பாசனம் பெறும் கிராம பகுதிகள் வழியாக ரத யாத்திரை நடத்தி அய்யாறு புனிதம் காக்கவும், அய்யாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவது, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள் மற்றும் வேளாண் கருவிகளை பெறுவதற்கு கடன் உதவி திட்டத்தை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது, பாரம்பரிய நாட்டு விதைகளை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் அரசு விற்பனை செய்ய வேண்டும்,

பாரம்பரிய விதைகளை மீட்டு சந்தைப்படுத்தும் விவசாயிகளுக்கு அரசு விருது வழங்கி கௌரவப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.