ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் செல்போன்கள் திருட்டு

0 92
Stalin trichy visit

திருச்சி உறையூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் செல்போன்கள் திருட்டு

திருச்சி ஜன.28 – திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த்( 32)  இவர் மண்டலம் – 1 ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர் எஸ் எஸ்)பொறுப்பாளராக உள்ளார்/ இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூபாய் ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர் இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருட்டு:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கீழக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் டேவிட் உபாகரசாமி . இவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார் அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார் மீண்டும் மறுநாள் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இதேபோல்
திருச்சி மேல அம்பிகா புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஷாஜகான்( 40) இவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். சிகிச்சை பெற்று திரும்ப மறுநாள் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் அங்கிருந்து திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.