தொட்டியத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு : முசிறி எம்.எல்.ஏ. பங்கேற்பு

0 102
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் தொட்டியம் தாலுகாவில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு.

முசிறி தாலுகாவில் கரிகாலி ஊராட்சியிலும், தொட்டியம் தாலுக்கா எம்.புத்தூர் ஊராட்சியிலும் நடைபெற்ற நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் பெரியசாமி,மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன்,செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன்,நகர செயலாளர் தக்காளி தங்கராசு,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் விவசாயிகள் மத்தியில் அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வாழ்த்தி பேசினர்.
விவசாயிகள், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்ததற்கு விவசாயிகள் அரசுக்கு நன்றி கூறினர்.விழாவில் விவசாயிகள் அரசு துறை அலுவலர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.