தா.பேட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருச்சி, ஜன.30- தா.பேட்டை அரு புகையிலை பொருட்கள் விற்றவர் கைது கே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மகாதேவி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக வருவாய் துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து திருச்சி துணை ஆட்சியர் பரூக் தலைமையில், முசிறி தாசில்தார் லோகநாதன், தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று புகார் வரப்பெற்ற பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கஞ்சா எதுவும் சிக்கவில்லை. ஆனால் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் 40 பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் கனகராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.