நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

0 133
Stalin trichy visit

திருச்சி, ஜன.31 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, மருத்துவக்கல்லூர் முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத், மண்டல தலைவர் மதிவாணன், அரசு மருத்துவர்கள், பணியாளர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.