கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 89
Stalin trichy visit

திருச்சி, பிப்.3  ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு வழங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தவேண்டும், ரயில்வேயில் உள்ள 2.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர்சிங், தனியார்மய முறையைகைவிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் அதன் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொன்மலை ரயில்வே பணிமனையில் அனைத்து கிளைகளிலும் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிமனைகளுக்கு மற்றும் ரயில் நிர்வாகத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை, ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றாத பட்சத்தில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தின் போது நடந்த மிகப்பெரிய ரயில் மறியல் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் போன்று மீண்டும் ஒரு தொடர் வேலை நிறுத்த போராட்டம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.