துவரங்குறிச்சியில் விவசாய சங்கத்தினர் அடையாள உண்ணாவிரதம்
திருச்சி, பிப்.3 மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் அனைத்து விவசாய சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
மணப்பாறை சட்டமன்ற தொகுதி விவசாயிகளின் 60 ஆண்டு கால கோரிக்கையாக
கரூர் மாவட்டம், மாயனூர் காவேரி கதவணையில் இருந்து உபரி நீர் கால்வாய் திட்டத்தை திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து அணை, மருங்கி ஏரியை இணைத்து மணப்பாறை ஒன்றியம், மணப்பாறை நகரம், வையம்பட்டி ஒன்றியம் மருங்காபுரி ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் பயன்பாட்டிற்கும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் ஏரி குளங்களில் நீர் ஏற்றம் செய்து உபரிநீர் கால்வாய் திட்டத்தை அமல்படுத்த கோரி திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் பசுமை புரட்சி பாசன விவசாய சங்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாகவும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு பசுமை புரட்சி பாசன விவசாய சங்கம் நிறுவன தலைவர் கே சி பழனிச்சாமி தலைமையில் அனைத்து விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.