மணப்பாறையில் மதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

0 118
Stalin trichy visit

திருச்சி, பிப்.3 பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினமான இன்று மணப்பாறையில் மதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு தினம் இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி ரோடு மாரியம்மன் கோவில் அருகில் இருந்து மதிமுகவினர் மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் நகர செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலையில் மதிமுக கட்சி கொடியினை ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்றடைந்தனர்.
இந்த ஊர்வலமானது மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்து, அவனைத் தொடர்ந்து அங்கு இருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்க கோஷங்கள் எழுப்பி வீர வணக்கம் செலுத்தினர்.

இந்த ஊர்வலத்திற்கு வடக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.