முசிறியில் புதிய கட்டிடங்கள் காணொளி காட்சி மூலம் திறப்பு

0 104
Stalin trichy visit

திருச்சி, பிப்.7  முசிறியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், முசிறியில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டபட்டுள்ளது. அதேபோன்று முசிறி அரசு மருத்துவமனையில் ரூ 1.06 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், முசிறி சட்டமன்றத் தொகுதி காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோபிநாத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கங்காதரணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.