ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயன் முறை மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

0 97
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயன் முறை மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 350 இயன்முறை மருத்துவர்களுக்கும் 10 தொழில்சார் சிகிச்சையாளர் பேச்சு பயிற்சியாளர்களுக்கும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.  பணியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு இபிஎப் வழங்கிட வேண்டும்.

அனைத்து இயன்முறை மருத்துவர்களுக்கும் பணிபாதுகாப்புடன் இஎஸ்ஐ போன்ற நியாயமான சலுகைகள் வழங்கப்படவேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை தொகுப்பூதியம் உச்ச நீதிமன்ற வழிகாட்டல்படி நிரந்தர ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் அரசு விதிகளின்படி சம்பள உயர்வு வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களுக்கு பணியிட மாற்றம் கேட்கும் இயன்முறை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதலுக்கு உதவிட வேண்டும்.

இயன்முறை மருத்துவர்களின் காலிப்பணியிடங்களை உரிய முறையில் அரசு விதிகளின்படி விரைவாக நிரப்பிட வேண்டும்.

ஒவ்வொரு வட்டாரத்திலும் இயன்முறை மருத்துவர் சேவை தினமும் அவசியத் தேவையாக உள்ளதால் மாற்றுப்பணியில் வேறு ஒன்றியத்துக்கு பணியமர்த்தாமல் ஒரே ஒன்றியத்தில் பணி செய்திட அனுமதிக்க வேண்டும்.

கோவிட் காலம், விபத்துகள் போன்றவற்றில் பணிக்காலத்தில் அகால மரணமடைந்த இயன்முறை மருத்துவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் அவர் குடும்பத்தினரில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலையம் வழங்கிட வேண்டும்.

பணிநிரந்தரம் செய்யும் வரை எதிர்பாராத விபத்து-நோய் போன்ற ஏதேனும் காரணங்களால் உடல் நிலை பாதிப்படுையம் இயன்முறை மருத்துவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பும், பெண் இயன்முறை மருத்துவர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்கும் போது நிரந்தர பணியாளர்களுக்கு சமமாக ஒரு ஆண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் அளிக்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.