தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, பிப்.10 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் நேற்று காலை உணவு வழங்கும் விழாவானது தமிழக முதலமைச்சரால் திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்ட நிலையில்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 2ல் உள்ள வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மொத்தம் அம் மண்டலத்தில் 607 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது இரவு தூய்மை பணியில் ஈடுபட்ட 35 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கிதுவக்கி வைத்து அவர்களுடன் கலந்துரையாடினார் .
மேலும் நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மாநகராட்சி சேர்மன் மு. மதிவாணன்
மண்டலம் 2ன் தலைவர் ஜெயநிர்மலா பகுதி கழகச் செயலாளர்கள் ராஜ்முகமது , பாபு
மாமன்ற உறுப்பினர்கள் வ.லீலாவேலு இ.எம்.தர்மராஜ் பா.கீதா எல்.ஜ.சி.க.சங்கர்
அ.ரிஸ்வானா த.சண்முகப்பிரியா கத்திஜா ந.பிரபாகரன் மாநகராட்சி மண்டலம் 3ன் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மண்டலம் இரண்டின் மாநகராட்சி அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.