வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராம மக்களுக்கு வேளாண் கல்லூர் மாணவர்கள் விழிப்புணர்வு

0 110
Stalin trichy visit

திருச்சி, பிப்.10 வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராம மக்களிடம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம், சமுதாய கூடத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, வரவிருக்கும் 2026 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் தவறாமல் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை மாணவர்கள் வலியுறுத்தினர். வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திவாய்ந்த கருவி என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும், வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்களின் கருத்துகளையும் தேவைகளையும் அரசியலில் பிரதிபலிக்க முடியும் என்றும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாக்குப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது. என்றும் விளக்கினர். வாக்குப்பதிவில் பங்கேற்காமல் இருப்பது, ஜனநாயக செயல்பாட்டில் இருந்து விலகுவதை ஒத்ததாகும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மாணவர்களின் விளக்கங்களை கவனமாக கேட்டனர். இந்நிகழ்ச்சி, கிராமப்புறங்களில் ஜனநாயக விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது

இந்த நிகழ்ச்சியில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் நித்திஷ்வர்.கோ, பார்த்தசாரதி. கா, ரஞ்சித் குமார்.பா, ரோகித்.ரா, சபரிநாதன்.ம, சாம் பிரசன்னா.ரா, சஞ்சய் ராவ்.ந, சந்தோஷ்சிவம்.த மற்றும் செல்வேந்திரன்.ஜெ ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.