மகா சிவராத்திரியையொட்டி மஹாகாளீஸ்வர் ஆலயத்தில் மகாஅபிஷேகம்

0 164
Stalin trichy visit

திருச்சி, பிப். 16  மகா சிவராத்திரியையொட்டி மஹாகாளீஸ்வரர் ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்தின் சிவலிங்க திருமேனிக்கு பால், அருகம்புல், நெல்லி, முள்ளி, திரவியபொடி, பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகபொருட்கள் கொண்டு மகாஅபிஷேகம்  நேற்று  நடைபெற்றது இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வர் ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்தின் திருமேனிக்கு பால், அருகம்புல், நெல்லி, முள்ளி, திரவியபொடி, பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகபொருட்கள் கொண்டு மகாஅபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நமச்சி வாய கோஷங்களை எழுப்பி உள்ளம் உருக வழிபட்டனர்

இதில் திருவெறும்பூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உற்பட ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.