பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் ரோடு பணியை தொடங்க வலியுறுத்தி சி.பி.ஐ கட்சியினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

0 110
Stalin trichy visit

திருச்சி, பிப்.16 திருச்சி துவாக்குடி சர்வீஸ் ரோடு பணியை உடனே துவங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு பணியை உடனே தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு இல்லாததால் ஆயிரக்கணக்கான விபத்துகளும் நூற்றுக்கணக்கான உயிர் பலிகளும் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இதனை உடனடியாக அமைக்க வேண்டி பல கட்சிகளும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் ஆனால் பணி இதுவரை தொடங்கவில்லை. ஆகவே உடனடியாக இதனை தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் காட்டூர் கைலாஷ் நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கியது.

போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி செல்வராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திலீபன் ரமேஷ் தமிழர் தேச கட்சி மாவட்ட செயலாளர் எட்வர்ட் , சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசி போராட்டத்தை துவங்கி வைத்தனர். இது குறித்து உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் செ.ராஜ்குமார் செய்தியாளர்கள் இடத்தில் கூறுகையில் திருச்சி மாவட்டம் மிக மையமான மாவட்டம். அனைத்து பகுதியிலும் இருந்தும் போக்குவரத்துக்கு மையமாக கடந்து செல்லக்கூடிய மாவட்டம் திருச்சி மாவட்டத்துல திருச்சி பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட உயிர்கள் பலியாயிருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊனமுற்று இருக்கிறார்கள். குடும்ப தலைவர்களை குழந்தைகளை மிக பெரிய உயிரிழப்பு நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ச்சியாக நடந்து கொண்டுஇருக்கிறது. ஆனால் 16 ஆண்டுகால போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா கட்சியும் அது தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, மாநில கட்சியாக இருந்தாலும் சரி, எல்லா கட்சிகளும் இந்த சர்வீஸ் சாலை வேண்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த எல்லா விதமான போராட்டங்களும் நடந்து முடிந்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் முடிந்திருக்கிறது. ஆர்ப்பாட்டம், பேரணி ,மறியல் ,முற்றுகை போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். தொடர் உண்ணாவிரதம் நடத்தி இருக்கிறார்கள். இப்படி எல்லாரும் எல்லா கட்சியினரும் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பும் சேர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின்பும், உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்பும் இந்த சர்வீஸ் சாலை துவங்கப்படாமல் இருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சாலை விபத்தில் பலிகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் பலிகள் நடந்து கொண்டே இருக்கிறது. எங்கேயோ ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சர்வீஸ் சாலை இங்கு அமைக்கப்படவில்லை. இந்த தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து போராடி கொண்டே இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து போராடி கொண்டே இருக்கிறார். ஆனால் இந்த சர்வீஸ் சாலை அமைக்க படவில்லை எங்களுக்கு சந்தேகமா இருக்கு. எங்கேதான் இந்த தடை இருக்கு? யார் தான் இந்த சர்வீஸ் சாலை அமைக்க விடாமல் இருக்கிறார்கள்? அந்த தடையை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேறு வழியின்றி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இங்கே துவங்கி இருக்கிறோம். நிச்சயமாக கோரிக்கை தொடர்ந்து இங்கே இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும்னு ஒருபுறம் சொல்லிக்கிட்டே இருந்தாலும், புதிய புதிய வணிக நிறுவனங்கள் இங்கே கட்டப்பட்டு கொண்டே இருக்கு. மக்கள் மத்தியில் கோரிக்கை ஒருபுறம் எழுந்து கொண்டே இருக்கக்கூடிய அளவுல, ஆனால் இருபுறமும் புதிய புதிய வணிக நிறுவனங்கள் வருவது மிகப்பெரிய அரசின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அவநம்பிக்கையை போக்கக்கூடிய வகையில இந்த அரசாங்கம் கட்டிடங்களை நிலத்தை கையகப்படுத்தக்கூடிய பணியை தொடங்கும் வரை இந்த போராட்டம் தொடரும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கு ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டு கொண்டிருக்கிறோம். அதற்கு ஆதரவாக இங்கே வந்து கொண்டிருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர்தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனைவருக்கும் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.