சிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் நடத்திய சிறப்பு மகா பூஜை
திருச்சி, பிப்.16 மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி அரியமங்கலத்தில் அகோரிகள் நடத்திய மெய்சிலிர்க்கவைக்கும் சிறப்பு மகாபூஜை
திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது.
இந்தக் கோவிலை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி குருவான மணிகண்டன் என்பவர் நிர்வகித்து நவராத்திரி, சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி வணக்கம் விசேஷ நாட்களில் விசேஷபூஜைகள் செய்துவருகிறார்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்றுநள்ளிரவில், அகோரிகள் தங்களது உடல்முழுக்க திருநீறு மற்றும் சாம்பலை பூசிக்கொண்டு ஜெய் அகோரகாளி மற்றும் ஜெய் அஷ்டகாலபைரவர் முன்பு அமைக்கப்பட்ட யாககுண்டத்தில் அகோரி குரு தலைமையில் சிறப்பு யாகம் நடத்தினார்கள்.
யாகத்தின்போது, நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றை இட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கொலி எழுப்பியும் ஹர ஹர மஹாதேவ் என முழங்கிட மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்கள், மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.