முசிறியில் உலக சிந்தனை தினத்தை முன்னிட்டு சாரண-சாரணியர் அமைதிப் பேரணி

0 201
Stalin trichy visit

திருச்சி, பிப்.23 முசிறியில் உலக சிந்தனை தினத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சாரண-சாரணியர் பங்கேற்ற பிரம்மாண்ட அமைதிப் பேரணி..

இயற்கை பாதுகாப்பு குறித்த பதாகைகள் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பி சென்றனர்..

திருச்சி மாவட்டம், முசிறியில், உலக சிந்தனை தினத்தை முன்னிட்டு பாரத சாரண-சாரணியர் இயக்கம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,

பாரத சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவுல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், முசிறி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள நேரு பூங்காவிலிருந்து இந்த அமைதிப் பேரணி தொடங்கியது. முசிறி கல்வி மாவட்ட அலுவலர் குணசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
“இயற்கையை பாதுகாப்போம்”, “சுற்றுச்சூழலை காப்போம்” என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, சீருடை அணிந்த சாரண-சாரணியர் உற்சாகமாக முழக்கமிட்டபடி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பின்னர் மீண்டும் பள்ளி வளாகத்தையே வந்தடைந்தது.
இந்த நிகழ்வில் முசிறி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முசிறி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.