அரசாணையை எரிக்க முயன்ற மாற்றுத்திறனாளிகள்: தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
திருச்சி, பிப்.23 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ள அரசாணை நகலை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்