வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் பெரியதேர்பவனி : ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்தனர்

0 168
Stalin trichy visit

திருச்சி, பிப். 26  மணப்பாறை அருகே வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன் பெரிய தேர் பவனி. ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர், சங்கர், பெரியக்காண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில ஆண்டு தோறும் மாசிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 17 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை வேடபரி விழா நடைபெற்றது. அதேபோல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி நேற்று பிற்பகல் நடைபெற்றது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியகாண்டியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை அடுத்து மேளதாளங்கள் முழங்க பெரியகாண்டியம்மனின் உற்சவர் சிலை தேருக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேரில் வைக்கப்பட்ட பின்பு ஆயிரக்கணக்கானோர் பக்திப்பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர் கோவிலை சுற்றி வரும்போது தேரின் மீது மலர் மாலைகளை பக்தர்கள் வீசி அம்மனின் அருள் பெற்றனர். கோவிலைச் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை மாலை நடைபெறும் சத்தாவர்ணம் எனும் மஞ்சள் நீராட்டுடன் மாசிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.