திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் ஹிந்தி பெயர்: தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம்

0 101
Stalin trichy visit

திருச்சி,மார்ச் 4  திருச்சி ,தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் கர்தவ்ய த்வார் என ஹிந்தியில் எழுதி உள்ளனர்.

இதனை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் உள்ள ஹிந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.