சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.93 லட்சம் உண்டியல் காணிக்கை
திருச்சி, ஜூலை 29 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.93 லட்சம் காணிக்கை 1கிலோ 174 கிராம் தங்கமும் கிடைத்தது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாத மும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய ரும், இக்கோவிலின் தக்காருமான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனி வாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில், ரூ.93 லட்சத்து 68 ஆயிரத்து 750-ம், 1கிலோ 174 கிராம் தங்கமும், 1கிலோ 983 கிராம் வெள்ளியும், மேலும் வெளி நாட்டு நோட்டுகள் 151, நாணயங்கள் 1,226 கிடைத்தன. மேலும் உப கோவில்களான ஆதிமாரியம்மன் கோவில் உண் டியல்களில் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 452-ம், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் உண்டியல்களில் ரூ. 19 ஆயிரத்து 651-ம், போஜீஸ்வரர் கோவில் உண்டியல்களில் ரூ.6 ஆயிரத்து 759-ம்கிடைத்துள்ளதாககோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.