வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி 20 பேரிடம் ரூ.38 லட்சம் மோசடி: திருச்சி தம்பதி மீது வழக்கு
திருச்சி,, ஜூலை29 குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மேலகலுங்கடியை சேர்ந்தவர் வனஜா வேத தான் நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகி றார். அவருக்கு திருச்சி வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (42), அவருடைய மனைவி மவுபீனர் பேகம் (36) ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவரி டம், இந்த தம்பதியினர் மொரீசியஸ் நாட்டில் வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதாகவும், நல்ல சம்பளம் கிடைக்கும் எனவும், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். இதை நம்பி வனஜா வேதமணியின் மகன் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 14பேரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 56 ஆயிரமும், வனஜா வேத மணியின் மகன் மேற்படி நபர்களிடம் இருந்தும் பணம் வாங்கி திருச்சி தம்பதியிடம் கொடுத் துள்ளார். மொத்தம் 20 பேரிடம் இருந்துரூ.38லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாகுல்ஹமீது, அவரதுமனைவிமவுபீனா பேகம் மீது போலி சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.