கண்ணாடி விரியன் பாம்பு கடித்த வாலிபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
திருச்சி, மார்ச்.16 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் இராமநாதபுரத்தில் வாலிபரை கடித்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு.காட்டூர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார் நேற்று மாலை வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்துள்ளது.ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.