திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடு : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
திருச்சி, மார்ச் 16 இந்திய அறிவுரையின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேற்று (15.03.2026) முதல் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து, புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 என 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 27 பறக்கும் படை குழுக்களும் மற்றும் 27 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது 24 மணி நேரமும் இயங்கும்.
இக்குழுக்களை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மேலும் 1800 599 000 001 மற்றும் 0431-2905846, 0431-2905921, 0431-2905578, 0431-2905591, 0431-2905813 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கும் அதிகமான தொகையினை ரொக்கமாக எடுத்து செல்ல வேண்டாம் எனவும், ரூ.10,000/-க்கும் அதிகமான மதிப்புள்ள புதிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு, உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி உள்ளார்.