ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

0 200
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026- தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை 2026ஐ முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக கண்காணிப்பு அறை, ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன் நேற்று (17.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் நடத்துவதற்கும் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், தேர்தல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கும் கண்காணிப்பு அறைகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது.

அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளுக்கு பொறுப்பு அலுவலர்கள், பணியாளர்கள் நியமித்து தொலைக்காட்சி, கணினி வசதி, இண்டர்நெட் வசதி, போன்ற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன்  நேற்று (17.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்நிகழ்வின் போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.