வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

0 189
Stalin trichy visit

திருச்சி,மார்ச் 18 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் நேற்று  (17.03.2026 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வும், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும், இலால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி வார்டு 1 முதல் 5 வரை உள்ள வார்டுகளில் ஒலிபெருக்கி மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்புதூர் பிஷப் ஹைமன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வையம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தொடங்கி வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்றது.

விழிப்புணர்வு ஓவியங்கள்: தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது வாக்கு – எனது உரிமை எனும் தலைப்பில் ஓவியம் வரைதல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் பலரும் தங்களது திறனை வெளிப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வை ஓவியங்களை வரை காட்சிப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.