ஒருவழிப்பாதை பயணம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் இளைஞர் உயிரிழப்பு

0 51
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 26 சரியான திசையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சரியான திசையில் வந்த இளைஞர் பலி

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்

இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,முதற்கட்ட விசாரணையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த இளைஞர் கார்த்தி என்பதும்

இவர் அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சரியான திசையில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மோதியதாக கூறப்படுகிறது,அப்போது வாகனம் நிலை தடுமாறிய போது பின்னால் வந்த டிப்பர் லாரி இளைஞர் கார்த்தி மீது ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இளைஞர் கார்த்தி பலியாகிஉள்ளார்

இந்த விபத்து குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் எதிர் திசையில் வந்து விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்தவர் கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதை பயணம் என்பது தற்போது சர்வ சாதாரணமாக மாறி வருகிறது அதிலும் பஞ்சப்பூர் பகுதி என்றாலே அந்தப் பகுதியில் பணி செய்யும் ஒரு சில அலுவலர்கள் இளைஞர்கள் ஒரு வழியே வந்து பஞ்சப்பூர் வரை மறுசாலைக்கு மாறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதனை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.