திருச்சி மாவட்டத்தில் 85.42 சதவீதம் வாக்குப்பதிவு

0 22
Stalin trichy visit

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக 85.44 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 85.42 என்று துல்லிய தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று 9 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீதங்களின் விவரம் வருமாறு:

மணப்பாறை : மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 02 பேர் வாக்களித்துள்ளனர். இது 88.81 சதவீதமாகும் ஆகும்.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 304 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது 87.90 சதவீதமாகும்

திருச்சி மேற்கு : திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து இது 284 பேர் வாக்கு செலுத் தியுள்ளனர். இது 81.32 சதவீதமாகும்

திருச்சி கிழக்கு : திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 51 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். 81.77 சதவீதமாகும்

திருவெறும்பூர்: திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 744 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். இது 81.20 சதவீதமாகும்

லால்குடி: லால்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 390 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர் இது 86.43 சதவீதமாகும்

மணச்சநல்லூர் : மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 347 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது 87.67 சதவீதமாகும்.

முசிறி: முசிறி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 532 பேர் வாக்கு செலுத்தியுள் ளனர். இது 86.69 சதவீதமாகும்.

துறையூர்: துறையூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்தை 82 ஆயிரத்து 295 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது 86.52 சதவீதமாகும்.

மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் 18 லட்சத்து 22 ஆயிரத்து 95 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். அதன் வாயிலாக திருச்சி மாவட் டத்தின் வாக்கு சதவீதம் 85.42 சதவீதமாகும்.

Leave A Reply

Your email address will not be published.