காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்ற உதயநிதி பதவியை ராஜினாமா செய்வாரா?: காங்.கட்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி
திருச்சி, மே 7 காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அப்போது அவர் கூறுகையில்
இரண்டு நாட்களில் ஒரு தெளிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் சென்னை செல்கிறேன் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்தும், தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்யப்போகிறது என்பதை உற்றுநோக்கக்கூடிய காலம் உள்ளது, அடுத்த 10நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்றக்கூடிய நம்பிக்கையில் உள்ளோம்
தமிழக வெற்றி கழகத்திற்கு 35% வாக்குகளும் திமுகவிற்கு 30 சதவீதம் வாக்குகள் உள்ளது, இது பாஜகவுக்கு எதிரான நிலையை காட்டுகிறது பாஜக தமிழகத்தில் காலூன்றகூடாது என்றநோக்கில் வாக்களிக்கப்பட்டது என்பதனை காட்டுகிறது
மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது, இது உடையகூடாது என்றநோக்கில்தான் காங்கிரஸ் கட்சியும் முடிவுஎடுத்துள்ளது
விஜயும் மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜகவுக்கு எதிரான பல விஷயங்களை உரத்த குரலில் பேசவேண்டும்
காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தமிழகத்தின் நிலை மற்றும் மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கவேண்டும் என்றநிலையில்தான் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பின்மை முன்னிறுத்தியே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
கூட்டணி வாக்குகள் மூலமாகத்தான் ஏற்கனவே திமுக 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றார்கள். எனவே அதனை அவர்கள் ராஜினாமா செய்வார்களா? அதுபோல உதயநிதி ஸ்டாலினும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன்தான் வெற்றிபெற்றார் என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமாசெய்வாரா? எனக்கு காங்கிரஸ் எம்பி கேள்வி
பாஜகவின் அடுத்தகட்ட நகர்வை முடக்கும் விதமாகத்தான் இந்த காங்கிரஸ் மூவ்,
தேர்தலின் போது பலதலைவர்கள் பஞ்ச் டயலாக் கூறியநிலையில் அதற்கு தற்போது விளக்கம் அளிக்க முடியாது,விஜய் தனது வாக்குறுதி எவ்வாறு நிறைவேற்றப்போகிறார் என்பதைத்தான் பார்க்கவேண்டும்
மற்ற கட்சிகள் அனைத்தும் பெருமளவில் பணம் செலவழித்துதான் போட்டியிட்டார்கள் ஆனால் விஜய் கட்சியில் உள்ளவர்கள் பெரும் செலவுசெய்து போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை, ஒருசிலர் தவிர விசில் சின்னத்தில் யார் வேட்பாளர் என்பதுகூட தெரியவில்லை, பிரச்சாரம் சரியாக செய்யக்கூடவில்லை ஆனால் வெற்றிபெற்றுவிட்டனர்
இதனால் மிகப்பெரிய செலவுசெய்து அந்த பணத்தை எடுக்க வேண்டிய எண்ணம் அவர்களுக்குஇல்லை எனவே இது ஊழலுக்கு வழிவகுக்காது
திமுக அதிமுக கூட்டணி அமைப்பது என்பது, பாஜகவுடன் நேரடி தொடர்பில் உள்ள ஒரு கட்சியுடன் திமுக கூட்டணிசெல்வது என்பது சரியாக வருமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்
தேர்தலுக்கு முன்பும் சரி தேர்தலுக்குப் பின்பும் சரி கூட்டணியில் தலைமைவகித்த திமுக ஒரு பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்துகொள்ளவில்லை
தமிழகத்தில் பாஜக காலூன்றிவிடக்கூடாது என்பதற்காகதான் ஸ்டாலின் கடந்த 5ஆண்டுகளாக அரசியல்செய்தார், அதேபோன்றுதான் காங்கிரசும் தற்போது இந்தமுடிவு எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்தலாமா என பாஜக முயற்சித்துவரும்நிலையில் அதனை முறியடிக்கும்விதமாகத்தான் காங்கிரஸ் இந்த முடிவு எடுத்துள்ளது
பெரும்பான்மை இல்லாவிட்டால் 6மாதம் இதுபோன்று இழுத்துக்கொண்டு செல்லும் அதற்கு வாய்ப்பளிக்ககூடாது.
ஒரு நடிகருக்காக ரசிகர்கள் பட்டாளம் மற்றும் அரசுக்கு எதிரான மக்கள் நிலைப்பாடு போன்றவையும் தமிழக வெற்றி கழக வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது, ஆட்சியில் இருந்தவர்கள் தான் தேர்தலுக்கு அதிக செலவழித்து உள்ளனர், இந்த சூழலில் தானும் ஒரு சீன் கிரியேட் பண்ண வேண்டும் என்பதற்காக தான் ரஜினியும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் என்றார்