ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர் திருவிழா: மே 14 அன்று உள்ளுர் விடுமுறை

0 11
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் “சித்திரைத் தேர் திருவிழா”-வை மே திங்கள் 14-ம் நாள் (14.05.2026) அன்று முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் “சித்திரைத் தேர் திருவிழா”-வை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு 14.05.2026 (வியாழக் கிழமை) அன்று மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும், பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. மேற்படி விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 23.05.2026 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.