மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலி

0 11
Stalin trichy visit

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். புலிவலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே நவீன் (20) என்பவர் ஓட்டி வந்த கே.டி.எம் பைக், கந்தசாமியின் வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த நவீன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கந்தசாமியின் மகன் முருகேசன் புலிவலம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.