நாய் குரைத்ததால் தகராறு : வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

0 10
Stalin trichy visit

திருச்சி, மே 8 . திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஈசனைக்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை (38). இவர் கடந்த மாதம் அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மித்ரன் (25) என்பவரது நாய், சங்கப்பிள்ளையைப் பார்த்து குரைத்துள்ளது.

தற்காப்பிற்காக சங்கப்பிள்ளை அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து நாயை விரட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மித்ரன், சங்கப்பிள்ளையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார். மேலும், அருகில் கிடந்த கல்லை எடுத்து சங்கப்பிள்ளையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தலை மற்றும் உடலில் காயமடைந்த சங்கப்பிள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மித்ரனை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.