துறையூர் த.வெ.க. எம்.ஏல்.ஏ. சட்டப்பேரவை துணை சபாநாயகராக தேர்வு
திருச்சி, மே 12 திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி) தொகுதி மு.ரவிசங்கர் யின் சட்டப்பேரவை உறுப்பினர் மு. ரவிசங்கர் (41) சட்டப் பேரவை துணைத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், பூனாம் பாளையத்தைச் சேர்ந்த மு. ரவிசங்கர், சட்டப் பேரவை துணைத் தலைவராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டயப் படிப்பு முடித்துள்ள மு. ரவிசங்கர் மனைவி, ஒரு மகன் உள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், 2014ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது, திருச்சி புறநகர் மேற்கு மாவட்டச் செயலராகவும் கட்சியின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளார்.