மணப்பாறையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பு : த.வெ.க.வினர் வாக்குவாதம்

0 15
Stalin trichy visit

திருச்சி, மே 12  மணப்பாறையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற த.வெ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளான பெரியார் சிலை ரவுண்டானா, பேருந்து நிலையம், புதுத் தெரு, மாரியம்மன் கோவில், திருச்சி சாலை, காமராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் விளம்பர பாதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினராகி உள்ள தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் கதிரவனுக்கு வாழ்த்து தெரிவித்தும், மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா சம்பந்தமான பதாகைகளும் பல்வேறு வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் சாலையோரங்களில் நகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மதுரை சாலையில் ஆரம்பித்து பெரியார் சிலை அருகே வரும்போது அங்கு வந்த தவெக கட்சி நிர்வாகிகள் சிலர் பாதகைகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகரமைப்பு அலுவலர் சிந்தியா விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் அகற்றப்படுவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்துள்ளோம் ஆனால் அவர் பதவியேற்று இன்னும் மணப்பாறைக்கு வராத நிலையில் விளம்பர பதாகைகள் அகற்றப்படுவது சரியானதல்ல. மேலும் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்காக வைக்கப்பட்டுள்ளன பதாகைகளும் திருவிழா முடிவடைவதற்கு முன்னரே எவ்வாறு அகற்றலாம் எனவும் கூறி நகரமைப்பு அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் விளம்பர பதாகைகள் அகற்றும் பணியை கைவிட்டு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.