திருச்சியில் தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் : பயணிகள் கடும் அவதி

0 106
Stalin trichy visit

திருச்சி மே 30 திருச்சி துவாக்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி இன்று காலை ஒரு தனியார் நகர பேருந்துபயணிகளை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தது அப்பொழுது அந்த பஸ் மார்க்கெட் நிறுத்தத்தில் நின்றபோது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சுமார் 50 இளைஞர்கள் பஸ்சில் ஏறி உள்ளனர்.

பிறகு பஸ்சில் ஏறிய இளைஞர்களிடம்  நடத்துநர்  பயணச்சீட்டு வாங்கும்படி கேட்டபோது “நீ எடு… நான் எடு” என்று மாறி மாறி பேசிக்கொண்டு வந்தவர்கள் டிக்கெட் எடுக்க வில்லை .
ஒரு கட்டத்தில் கண்டக்டர் சத்தம் போட்ட போது கண்டக்டரை தாக்கியுள்ளனர்.
இதனால் அந்த பேருந்தை கொண்டு வந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டனர். பிறகு எல்லா தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர்க்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த எல்லா தனியார் பேருந்து களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பயணிகள் பலர் நீண்ட நேரமாக அவதிப்பட்டு பஸ்சிலிருந்து கீழே இறங்கி நடந்து சென்றனர். பிறகு தகவல் அறிந்து கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று தனியார் பேருந்து டிரைவர் கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் ஓட்டுநர், நடத்துநர்  மீது தாக்குதல் நடத்துவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் திருச்சி மாநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்  மீது மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.