திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, ஜூலை 27 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருவரம்பூர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. oசெயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். கூட்டத்தில், கழக வளர்ச்சி, பணிகள், கழகத்தை வலுப்படுத்துவது,மக்களு டனான தொடர்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கிளை கழக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாகிகள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி கழக முன்னோடி மயில் பெரியசாமி மற்றும் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பி.எல்.ஏ.2 உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.